ரூ .1000 மதிப்புள்ள கடன் பத்திரங்கள் வெளியீடு

சென்னை

சென்னை,ஏப்.7:
ஸ்ரீராம் சிட்டியூனியன் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தலா ரூ.1000 மதிப்புள்ள மீட்கக்கூடிய மாற்றமுடியாத ஈடுவைக்கப்படும் கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.

பகுதி-1 வெளியீட்டின் அடிப்படை தொகை ரூ.1000 மில்லியன் ஆகும். அத்துடன் பங்களிக்கப்பட்ட தொகை வெளியீட்டை விட அதிகமாக இருக்
கும் பட்சத்தில் விருப்பத் தேர்வாக ரூ.6500 மில்லியன் வரையிலும் திரட்ட முடியும். அதிகபட்சமாக பங்களிப்புகளை ரூ.7500 மில்லியன் வரையிலும் திரட்டலாம். அது நிறுவன வரம்பான ரூ.30 ஆயிரம் மில்லியனுக்குள் இருக்கும். இந்த நிலையானது கேர் நிறுவனத்தாலும், கிரிஸில் நிறுவனத்தாலும், ஸ்டேபிள் அவுட்லுக் என்று உச்சரிக்கப்படும்.

பகுதி 1 வெளியீடு 5-.3.2019 அன்று துவங்கியது 3.5.2019 அன்று முடிவடைகிறது.அத்துடன் முன்னரே முடிவுக்கு கொண்டுவரலாம் அல்லது நீட்டிக்கலாம் என்ற விருப்பத்தேர்வை கொண்டுள்ளது.

முன்மொழியப்பட்டதன் அடிப்படையில் வழங்கப்படும் இந்த என்சிடிக்கள் கேர் நிறுவனத்தாலும் கிரிஸில் நிறுவனத்தாலும் 30 ஆயிரம் மில்லியன் தொகை அளவிற்கு தகுதியாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேர் மற்றும் கிரிஸில் ஆகியவற்றால் அளிக்கப்பட்ட இந்த தகுதியாக்கல் நிதி கடமைகளை தக்க சமயத்தில் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் உச்சப்பட்ச பாதுகாப்பு கொண்டவை என்று கருதப்படுகிறது.

இம்மாதிரி நிதிசார் ஆவணங்கள் மிகக்குறைவான பற்று ஆபத்தை கொண்டவை. இந்த நிறுவனங்களால் வழங்கப்பட்ட இந்த மதிப்பீடுகள் வழங்கும் முகமையினால் எந்த நேரத்திலும் நிறுத்திவைக்கப்படலாம் அல்லது திரும்ப பெற்றுக்கொள்ளப்படலாம் அல்லது திருத்தி அமைக்கப்படலாம். எந்த ஒரு மதிப்பீட்டையும் சாராமல் தனியாக மதிப்பிடவேண்டும்.

ரூ.1000 மதிப்புள்ள கடன் பத்திரங்கள் வெளியிடுவது குறித்து நிறுவனத்தின் துணைத்தலைவர் மணிஷ்தோஷி, செயல் இயக்குனர் ஆர்.சந்திரசேகர், நிர்வாக இயக்குனர் ஆர். துர்வாசன், உதவி துணைத்தலைவர் கிருத்திகா துரைசுவாமி, மற்றும் துணைத்தலைவர் மந்தீப் சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர்.