வேலூர், ஏப்.6:
ஆம்பூர் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல், அவரது மனைவி மற்றும் கார் டிரைவர் உட்பட 3பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகததை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
திருப்பத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.சி சுந்தரவேல்.இவர் இன்று காலை ஆம்பூரில் இருந்து திருப்பதிக்கு தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் வாணியம்பாடி அருகே சென்றபோது விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி விவத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி, லாரியின் அடியில் சிக்கிக்கொண்டது.
இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கொடுத்த புகார் தொடர்பாக வாணயம்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியின் அடியில் சிக்கிய காரை மீட்டனர்.

இந்த விபத்தில் முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல், அவரது மனைவி மற்றும் கார் டிரைவர் என 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்தில் பலியான முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.சி சுந்தரவேல், 1991ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

அதிமுக பிரிந்ததையடுத்து டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்தார். அக்கட்சியில் திருப்பத்தூர் நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதிக்கு சென்ற முன்னாள் எம்எல்ஏ அவரது மனைவி மற்றும் கார் டிரைவர் என மூன்று பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.