சென்னை, ஏப்.7:  வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு பரப்புவதாகக் கூறி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வன்னியர் கல்வி அறக்கட்டளை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள வன்னியர் சொத்துகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தனது துணைவியார் பெயரில் மாற்றி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி அவருக்கு வழக்கறிஞர் க.பாலு மூலமாக வழக்கறிஞர் அறிவிக்கையை அனுப்பப்பட்
டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், வன்னியர் அறக் கட்டளை சொத்துக்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள வன்னியர்களின் சொத்துக்களை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது துணைவி யாரின் பெயரில் சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.
வன்னியர்களுக்காக பாடுபடுவதாக கூறிக்கொண்டு அவர்களது பணத்தில் வாங்கிய சொத்துக்களை தனது குடும்பத்தினர் பெயரில் ராமதாஸ் எழுதி இருப்பதாக ஸ்டாலின் குற்றஞ் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த ராமதாஸ், ஸ்டாலினை வன்மையாக கண்டித்தார். வன்னியர் அறக்கட்டளை சொத்துக்களை தனது துணைவியார் பெயரில் எழுதியதை நிரூபித்தால் பொது வாழ்விலிருந்தே விலகுவதாக ராமதாஸ் கூறினார். நிரூபிக்க தவறினால் ஸ்டாலின் அரசியலிலிருந்து விலகுவாரா என்று ராமதாஸ் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் ஸ்டாலின் அவதூறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள் ளதாக கூறி  அவருக்கு ராமதாஸ் வக்கீல் நோட்டீஸ்  அனுப்பியுள்ளார்.