புதுடெல்லி, ஏப்.7:  மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் சிறப்பு பணி அதிகாரி பிரவீன் காக்கர் இல்லத்தில் வருமான வரி துறை அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து
சோதனை நடத்தினர்.
தொடர்ந்து அமீரா குழுமம் மற்றும் மோசர்பேயர் நிறுவனத்தின் தலைவரான ரதுல் பூரி என்பவரின் வீடு மற்றும் பிற இடங்களிலும்  சோதனை நடந்து வருகிறது. இதற்காக டெல்லி, கோவா, இந்தூர், போபால் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 50 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் பிரதீக் ஜோஷி என்பவரது இல்லத்தில் கட்டு கட்டாக சூட்கேஸ்களில் பணம் நிரப்பி இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது.