மும்பை, ஏப்.7:  மகாராஷ்டிராவில் ரெயில் நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.  மகாராஷ்டிராவின் அம்பிவாலி பகுதியில் இருந்து குர்லா நோக்கி
செல்லும் ரெயிலில் இஷ்ரத் ஷேக் என்ற கர்ப்பிணி பயணம் செய்துள்ளார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவரை ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசார் உடனடியாக தானே ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு ரூபாய் கிளினிக்கிற்கு கொண்டு வந்துள்ளனர். இதன்பின் அங்கு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
தாயும், சேயும் நலமாக இருப்பதாக அந்த கிளினிக் தலைவர் கூறியுள் ளார். அவசர கால சிகிச்சைக்காக ரெயில் நிலையத்தில் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு சிகிச்சை அளிக்கும் கிளினிக் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.