விஜய்சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க ஆசை: மிஸ் இந்தியா

சினிமா

சென்னையை சேர்ந்த மாடல் அபூர்வி சைனி டெல்லியில் நடந்த ‘ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா’ என்ற அழகி போட்டியில் ‘மிஸ் இந்தியா எலைட் 2019’ பட்டத்தை வென்றார். சென்னையில் பொறியியல் படித்து வரும் அபூர்வி சைனி கூறியதாவது:-

எனக்கு பூர்வீகம் உத்தரபிரதேசம், அப்பா ரெயில்வேயில் வேலை பார்ப்பதால் மும்பையில் வளர்ந்தேன். தென்னிந்தியாவை ரொம்ப பிடிக்கும். அதனால் சென்னை வந்தேன். மாடலிங், சினிமாவில் அதிக ஆர்வம். பால போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் வென்றுள்ளேன். தீபிகா படுகோனை என் ரோல் மாடல். தமிழில் விஜய் சேதுபதியை பிடிக்கும், சமீபத்தில் அவர் நடித்த ‘96’ படத்தை பார்த்து வியந்தேன்.

ஹீரோயின்களில் நயன்தாராவின் சாதனை பிரமிக்க வைக்கிறது. சர்வதேச அளவில் மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் வெல்ல வேண்டும். சினிமாவில் கால்பதிக்க வேண்டும் என்பது என் ஆசை. சிறுவயது முதல் வறுமை மற்றும் பெண் வன்கொடுமைக்கு எதிராக போராடி வருகிறேன். ஹிந்தி டு வேர்ட்ஸ் சேஞ்ச் என்ற அமைப்பில் சேர்ந்து சமூக சேவை செய்கிறேன். வெள்ள நிவாரண, ரத்த தானம், குப்பை ஒழிப்பு விழிப்புணர்வு போன்றவற்றில் கவனம் செலுத்துகிறோம். இவ்வாறு அபூர்வி சைனி கூறினார்.