தேர்தல் விதியை மோடி மீறினாரா? நாளை அறிக்கை

இந்தியா

புதுடெல்லி, மார்ச் 28: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றி இந்தியாவின் விண்வெளி
சாதனையை அறிவித் ததில் தேர்தல் விதிமுறை மீறல் உள்ளதா? என்பதை கண்டறிய தேர்தல் ஆணையம் ஒரு குழு அமைத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் துணை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையிலான இந்தக் குழுவினர் மோடியின் உரையை பதிவு செய் வதற்கு தூர்தர்சன் அல்லது ஏஐஆர் விதி பயன்படுத்தப்பட்டதா? இதனால் அரசு கருவூலத்திற்கு செலவு ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரிப்பார்கள் என்றும், இன்று அல்லது நாளை இந்தக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்றும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறினார். இதனிடையே மோடியின் உரை யூடியூப் அலைவரிசையில் ஒளிபரப்பாகி பின்னர் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலிக்கு இணைப்பு கொடுக்கப்பட்டதாக தெரியவந்து உள்ளது.

எனவே அரசுக்கு சொந்த மான ஊடகத்தின் விதியை மோடி பயன்படுத்தி உரையாற்றவில்லை என்பதால் இதை தேர்தல் நடத்தை விதி மீறலாக எடுத்துக்கொள்ள முடியாது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.