புதுடெல்லி, மார்ச் 25: மக்களவைத் தேர்தலில் பயன்படுத்துவதற்காக ரூ.33 கோடிக்கு அழியாத மையை தேர்தல் கமிஷன் வாங்குகிறது. தேர்தல்களில் வாக்காளர்களின் விரல்களில் வைப்பதற்காக அழியாத மை பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2014 -ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போது 21.5 லட்சம் அழியாத மை பாட்டில்கள் வாங்கப்பட்டன.

தற்போது 4.5 லட்சம் பாட்டில்கள் அதிகரித்து 26 லட்சம் அழியாத மை பாட்டில்களை தேர்தல் கமிஷன் கர்நாடக மாநில கமிஷனுக்கு சொந்தமான மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னீஷ் நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.
இதற்கு ரூ.33 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.