சான் பிரான்ஸிகோ, ஏப்.1: இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவை முடங்கியதால் அதை பயன் படுத்துவோர் அவதிக்கு உள்ளானார்கள்.

உலகம் முழுவதிலும் 200 கோடி பயனாளர்களை கொண்டுள்ள பேஸ்புக் மற்றும் அதன் துணை செயலியான இன்ஸ்டாகிராம் ஆகியவை உலகம் முழுவதிலும் பல மணி நேரம் முடங்கியது.
இதை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம் டுவிட்டரில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.

அதில், பேஸ்புக் மற்றும் அதனுடைய இணை அப்ளிகேஷன்களை பயன்படுத்துவதில், சிக்கல்கள் இருப்பதாக பயனாளர்கள் கூறியதை நாங்கள் அறிந்துள்ளோம். இப்பிரச்சினையை கூடுமானவரையில் விரைவாக சரி செய்கிறோம்” என தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.