தீவிரவாதிகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை

உலகம்

வாஷிங்டன், ஏப்.1: இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் மிக மோசமான விளைவு ஏற்படும் என அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப், தீவிரவாதி களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம் பாகிஸ்தானுக்கும் அவர் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாமை அழித்தது. இதனால் ஏற்பட்ட மோதல் போக்கை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையிட்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பயங்கரவாதிகள் இயக்க தலைவர்கள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் நிலை உள்ளது. அதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும். மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இனியும் இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தினால் இந்தியா கொந்தளித்து விடும். அது பெரிய பிரச்சனையாக மாறிவிடும். அதன் பிறகு அதை கட்டுக்குள் கொண்டு வருவது கடினமாக அமையும் என்று அவர் எச்சரித்துள்ளார்.